நூற்றாண்டைத் தொடும் பல்கலைக் கழக மகளிர் சங்கம்!

மெட்ராஸ், பல்கலைக்கழக மகளிர் சங்கமானது பெண்களுக்கு பாதுகாப்பு, கல்வி மற்றும் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிறு இயக்கமாக ஆரம்பிக்கப்பட்டு நூற்றாண்டு கால வளர்ச்சியை அடைந்துள்ளது.

இந்தச் சங்கம் பெண் கல்வி வளர்ச்சியில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சங்கம், சர்வதேச பட்டதாரிப் பெண்கள் இயக்கத்தின் ஒரு பகுதியாக இயங்கும் இந்திய பல்கலைக்கழக மகளிர் சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ், பல்கலைக்கழக மகளிர் சங்கத்தின் முக்கிய செயல்பாடுகளாக,

*இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் மாணவியருக்கு வருடாந்திர உதவித் தொகை வழங்கப்படுகிறது.

*பெண்களின் அறிவாற்றல் மற்றும் கல்வியை மேம்படுத்துதல் தொடர்பான ஊடாடல் பயிற்சி நடைபெறுகிறது.
*பணிபுரியும் பெண்கள் தங்குவதற்கு பள்ளிக்கரணையில் விடுதி அமைத்து தரப்பட்டுள்ளது.

மெட்ராஸ், பல்கலைகழக மகளிர் சங்கத்தின் நூற்றாண்டு விழா சென்னை, அடையாறில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்.ஜி.ஆர் அரங்கில் 20 ஆகஸ்டு 2022 அன்று நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் மெட்ராஸ், பல்கலைகழக மகளிர் சங்கத்தின் உறுப்பினர்கள் வரவிருக்கின்றனர்.

நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

தங்கள் மதிப்பிற்குரிய செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக இந்நிகழ்ச்சியினை வெளியிட்டு எங்களை ஊக்குவிக்கவும்.

நன்றி!

முனைவர் லதா ராஜேந்திரன்,
தலைவர்,
மெட்ராஸ் பலகலைக்கழக மகளிர் சங்கம்.

You might also like