பாகிஸ்தானால் நெருங்க முடியாத இந்திய அணியின் சாதனைகள்!

இந்த வருடத்திற்கான ஆசிய கிரிக்கெட் கோப்பை வருகிற 27ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்தியா தனது முதல் போட்டியை வருகிற 28ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது.

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே எப்பொழுது கிரிக்கெட் போட்டி நடந்தாலும் அது உலகக் கோப்பை இறுதிப் போட்டியை விட அதிக விறுவிறுப்பாக இருக்கும்.

இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறுகிறது என்றால் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்து விடுவார்கள். இந்த முறையும் அப்படித்தான்.

இந்த முறை ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தி விட மிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அதே நேரம் இந்திய அணியில் சில பல மாற்றங்கள் இருந்தாலும் கூட மிகுந்த பலமுடைய ஒரு அணி உருவாகி வருகிறது என்று சொல்லலாம்.

இந்தியா – பாகிஸ்தான் இதுவரை…

இதுவரை இந்தியாவும் பாகிஸ்தானும் 59 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன, இதில் இந்திய அணி 9 முறை வெற்றி பெற்றுள்ளது, பாகிஸ்தான் அணி 12 முறை வெற்றி பெற்றுள்ளது.

அதேபோல இந்த இரு அணிகளும் இதுவரை 132 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன, இதில் இந்திய அணி 55 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி 73 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

டி20 போட்டிகளில் மட்டும் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

இவ்விரவாதிகளும் இதுவரை 9 டி20 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் இந்தியா 7 முறை வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் வெறும் 2 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இந்த புள்ளி விவரங்களை வைத்து பார்க்கையில் இந்த முறை நடக்கும் ஆசிய கோப்பை தொடரானது டி20 போட்டிகளுடன் நடைபெறுகிறது என்பது சற்று ஆறுதலை தருகிறது.

இந்தியாவை ஒரு முறை கூட வெல்லாத பாகிஸ்தான்

என்னதான் புள்ளி விவரங்கள் அடிப்படையில் பாகிஸ்தான் முன்னிலை வகிக்கும் படி இருந்தாலும் இந்தியாவின் சில சாதனைகளை பாகிஸ்தான் அணி நெருங்க கூட முடியாத அளவுக்கு உள்ளன.

குறிப்பாக கடந்த 29 ஆண்டுகளில் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி ஒரு முறை கூட வென்றதில்லை.

அதேபோன்று டி20 உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் 13 முறை மோதி உள்ளன. இதில் இந்தியா 12 முறை வென்றுள்ளது, பாகிஸ்தான் ஒரு முறை தான் வென்றுள்ளது.

டெஸ்ட் போட்டிகளை எடுத்துக் கொண்டால் இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் தொடர்களில் 112 முறை டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியுள்ளது.

ஆனால், பாகிஸ்தான் அணி வெறும் 60 முறை மட்டுமே வென்றுள்ளது. குறிப்பாக கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணி சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட தோற்றதில்லை.

அதேபோன்று ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா அணியை டெஸ்ட் தொடரில் வீழ்த்துவது என்பது உலக அளவில் எல்லா கிரிக்கெட் அணிகளுக்கும் உள்ள மிகப்பெரிய ஆசையாகும்.

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் விழித்து விட்டால் கிரிக்கெட் உலகத்தில் ஒரு மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படும்.

உலக அளவில் இன்னும் சில அணிகள் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியதே கிடையாது. இந்திய அணி இரண்டு முறை இந்த சாதனையை படைத்துள்ளது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட் தொடர்களை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

ஆனால், பாகிஸ்தான் அணி ஒரு முறை தான் கைப்பற்றியுள்ளது.

குறிப்பாக தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடுவது பல ஆண்டுகளாக தடைப்பட்டிருந்தது.

இப்பொழுதுதான் கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் அணி மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறது.

இதன் காரணமாக பாகிஸ்தான் அணி இனி வரும் எல்லா போட்டிகளிலும் வெற்றியை சுவைக்க வேண்டும் என்று தீவிரமாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்னதான் ஒரு நாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியாவுக்கு எதிராக அதிக போட்டிகளை பாகிஸ்தான் வென்றிருந்தாலும், பாகிஸ்தான் அணியால் நெருங்க கூட முடியாத அளவுக்கு இந்திய அணி இத்தனை சாதனைகளை படைத்துள்ளது.

இந்திய அணியை டி20 போட்டிகளில் பெருமைப்படுத்த இன்னும் ஒரே ஒரு சாதனையை பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும், ஏனெனில் இப்போது நடக்கவிருக்கும் ஆசிய கோப்பை டி20 வடிவத்தில் விளையாடப்படுகிறது.

இந்திய அணியின் டி20 சாதனை

இந்திய அணி டி20 போட்டிகளில் இதுவரை 21 முறை 200 ரன்களை கடந்திருக்கிறது. பாகிஸ்தானி வெறும் 10 முறை மட்டுமே 200 ரன்களை கடந்துள்ளது.

உலகளவில் டி20 போட்டிகளில் ஒரு அணி 200 ரன்களை கடந்த சாதனையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வருகிற 28-ம் தேதி நடைபெறும் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெல்லுமா? இந்திய அணி வெல்லுமா? உங்கள் கருத்து என்ன?

– இளவரசன்

You might also like