சின்ன விஷயங்களின் அற்புதம்!

“இந்த உலகத்தில் கடினமான விஷயங்கள்
எளிதானவற்றிலிருந்து தொடங்குகின்றன.

இந்த உலகத்தில் பெரிய விஷயங்கள்
சிறியவற்றிலிருந்து தொடங்குகின்றன.

ஒரு மனிதன் கட்டிப்பிடிக்கிற அளவு மரம்
மென்மையான குருத்திலிருந்து கிளம்புகிறது.

ஒன்பது மாடிக் கோபுரம்
சிறு மண் குவியலிலிருந்து எழும்புகிறது.

ஆயிரம் மைல் பயணம்
காலடி நிலத்திலிருந்து துவங்குகிறது.

எனவே, பெரிய விஷயங்களை
ஞானி ஒருபோதும் செய்ய முயல்வதில்லை,
அதனாலேயே பெரிய விஷயங்களை
அவன் எப்போதும் சாதிக்க முடிகிறது”
*
பத்திரிகையாளர் ‘சமஸ்’ எழுதிய ‘ அரசியல் பழகு’ நூலில் சீனத் தத்துவ ஞானி லாவோ ட்சுவின் வரிகள்,

You might also like