‘பொன்னியின் செல்வன்’ பாடல் வெளியீட்டு விழாவில் முதல்வர்?

இயக்குனர் மணிரத்னத்தின் கனவுத் திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக உருவாக்கியுள்ளார். படம் இரு பாகங்களாக வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். முதல் பாகம் நிறைவடைந்து வெளியீட்டிற்குத் தயாராகி உள்ளது.

பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பதும், ஏற்கனவே இந்த படத்தில் இடம் பெற்ற ‘பொன்னி நதி’ என்ற சிங்கிள் பாடல் மற்றும் டீசர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

அந்த நிகழ்ச்சியையும் பிரம்மாண்டமான அளவில் நடத்த மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.

எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களை இயக்குனர் மணிரத்னமே நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செப்டம்பர் 6-ம் தேதி நடைபெறவிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் கட்டாயம் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

You might also like