குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை பரிசாய் அளியுங்கள்!

எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ஒர் உரையிலிருந்து கேட்ட பிள்ளை வளர்ப்பை பற்றிய ஒரு நல்ல கருத்து….

“நான் என் வீட்டுனுடைய தோட்டத்தில் ஒரு மாமரம் வைக்கின்றேன். அதை நான் தான் வளர்க்கிறேன்.

நான் தான் தண்ணீர் ஊற்றுகிறேன். நான் தான் அதை பாதுகாக்கிறேன்.

ஆனால், நான் விரும்புகிற பக்கம் அந்த மாமரம் ஒரு போதும் கிளைவிடாது, நான் விரும்புகிற நேரத்தில் மாமரம் ஒரு போதும் பூக்காது,

நான் விரும்புகிற நாளில் ஒரு போழுதும் கனிகளை தராது. அது, தன் இயல்பில் தான் கிளைவிடும், தன் இயல்பில் தான் பூக்கும் தன் இயல்பில் தான் கனி கொடுக்கும், கொடுக்காமலும் இருக்கும்.

என் வீட்டில் இருக்கும் மரமே எனக்கு ஒரு பாடத்தை சொல்லி கொடுக்கிறது, வைத்து வளர்ப்பது மட்டும் தான் உன் வேலையே தவிர உன் விருபப்படி வளரவே வளராது
அது.

ஆனால் பெரியவர்களுக்கு அது புரியவே புரியாது. நான் நினைத்ததை போலத்தான் உன்னை வளர்ப்பேன் என்று நினைக்கிறார்கள்.

நீங்கள் நினைப்பது போலத்தான் நான் வளர்வேன். ஆனால் உங்களுக்கு தெரியாமல் என் கிளைகளை ரகசியமாக வளரவிடுவேன். என் வேர்களை ரகசியமாக பரவவிடுவேன். வானத்தோடு எப்போதும் பேசிக்கொண்டு இருப்பேன். இன்னும் சொல்லப்போனால் என்னை உங்களுக்கு தெரியும்.

என் அகத்தை உங்களுக்கு தெரியாது. என் ரசனையை உங்களுக்கு தெரியாது. என் மனதை உங்களுக்கு தெரியாது. என் கனவுகளை உங்களுக்கு தெரியாது. அது நான் உருவாக்கிக்கொண்டது..

இதை கேட்ட போது கலில் ஜிப்ரானின் “The Prophet” ல் அவர் குழந்தைகளைப்பற்றி சொல்லிய மிக அற்புதமான கருத்துக்களும் நினைவில் எழந்தது நாம் அனைவரும் அவசியம் படிக்க வேண்டியது…

அவர்கள்…
உங்கள் குழந்தைகள்
ஆனால் …
உங்கள் உடமைகளல்ல .

உங்கள் வாழ்க்கை வேட்கையின் துளிர்கள்
உங்கள் மூலமாக அவர்கள் ஜனித்திருக்கலாம்
உங்களுடன் வாழலாம்

ஆனாலும் உங்கள் உடமைகளல்ல .
நீங்கள் அவர்களுக்கு அன்பைத் தரலாம்

அவர்களுக்கென
தனித்தனி சிந்தனையுண்டு
அவர்கள் உடலை நீங்கள் தீண்டலாம்
அவர்களின்
ஆன்மாவையல்ல

உங்களைப் போல் அவர்களை மாற்ற முடியாது
அவர்களைப் போல் நீங்கள் வாழலாம்-கனவில் !

அவர்கள் எதிர்காலத்தின் வாரிசுகள்
உங்கள் வில்லிலிருந்து புறப்படும் அம்பு அவர்கள்
மகிழ்ச்சியென்னும் இலக்கை நோக்கி அவர்களைச் செலுத்துங்கள்

அதை நீங்கள் செய்ய முடியும்!
அதை மட்டுமே செய்ய வேண்டும்!!

  • கலீல் கிப்ரான்
You might also like