– பராக் ஒபாமாவின் சிந்தனைக்குரிய வரிகள்:
பராக் உசேன் ஒபாமா (Barack Hussein Obama), ஐக்கிய அமெரிக்காவின் 44 ஆவது குடியரசுத் தலைவர். குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியியிட்டு வெற்றி பெற்றார்.
அமெரிக்க வரலாற்றில் ஆபிரிக்க அமெரிக்க இனத்தை சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும் செனட் அவையின் உறுப்பினரான ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
இவருடைய வாழ்க்கை அனுபவத்தில் இருந்து பிறந்த மேற்கோள்கள் சில
- உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது.
- எதிர்காலத்தைப் பற்றி பயம்கொள்ள வேண்டாம்; அதை உருவாக்கத்தான்
இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். - உங்கள் வேலையைப் பணத்துக்காக இல்லாமல், உங்கள் திறமைக்காகத்
தேர்வு செய்யுங்கள்! - உங்கள் வேலையைப் பணத்துக்காக இல்லாமல், உங்கள் திறமைக்காகத்
தேர்வு செய்யுங்கள்! - நம்மைத் தாக்க நினைக்கும் பயங்கரவாத சக்திகளுக்குச் சொல்வோம், எங்கள் உறுதியும், உணர்ச்சியும் வலிமை வாய்ந்தது அதை நீங்கள் உடைக்க முடியாது என்று.
- நாம் செய்வது சரியா தவறா என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும்!
- எந்த இடரும், தடையும் நேரினும் தகர்ப்பேன், ஆயிரமாயிரமாய் இன்னல்கள் தாக்கினும் நம்பிக்கையை இழக்காமல் இலக்கை எட்டுவேன், குறிக்கோளை வெல்வேன் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை உங்களுக்குள் விதையுங்கள்!