வெளிநாடு சென்ற இந்தியர்கள் 2,570 பேர் பலி!

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,

“இந்தியாவிலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு வேலைக்காகச் சென்றவர்களில், கடந்த 3 ஆண்டுகளில் 2,570 பேர் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.

இவற்றில் 2,478 இறப்பு வழக்குகள் அந்தந்த நாடுகளின் காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் தீர்க்கப்பட்டுள்ளன.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு உதவுவதற்காக இந்திய சமூக நல நிதியம் அமைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு காப்பீடுத் தொகையும் ஒன்றிய அரசு செய்து வருகிறது.

விபத்து மரணம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் 10 லட்சம் ரூபாய் காப்பீடு மற்றும் இதர சலுகைகள் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

You might also like