மெகா பள்ளம் உருவானதற்கான காரணம் என்ன?

சிலி நாட்டில் தாமிரச் சுரங்கத்திற்கு அருகே தோன்றிய மிகப்பெரிய பள்ளம் குறித்து அந்நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தென் அமெரிக்க நாடான சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவிற்கு வடக்கே உள்ள தாமிரச் சுரங்கத்திற்கு அருகே திடீரென மிகப்பெரிய அளவிலான பள்ளம் உருவாகியுள்ளது.

கனேடிய லுண்டின் சுரங்கத்தின் அருகே சுமார் 82 அடி விட்டமும் 200 மீட்டர் ஆழமும் கொண்ட ஒரு பிரம்மாண்ட பள்ளமாக கண்டறியப்பட்டுள்ளது.

அதன் அடியில் தண்ணீர் மட்டுமே தென்படும் நிலையில், வேறு என்ன இருக்கிறது என்பது குறித்து இதுவரை தெரியவில்லை என புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பள்ளம் ஏற்பட்டதற்கான காரணங்கள் என்ன? என்பது குறித்து புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like