அன்னை ஓர் ஆலயம் திரைப்படத்தில் சிறுத்தை ஒன்றை சர்வ சாதாரணமாக தோளில் தூக்கிப் போட்டபடி நடப்பார் ரஜினிகாந்த்.
இந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது, “மிருகங்களின் குணம் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். குறிப்பாக சிறுத்தை விஷயத்தில் நாம் ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எனவே `டூப்’ போட்டுக் கொள்ளுங்கள் என்று ரஜினியிடம், மிருகங்களை பழக்கும் `மாஸ்டர்’ கூறினார்.
ஆனால் ரஜினியோ, `டூப்’ போடவில்லை. அவராகவே சர்வசாதாரணமாக சிறுத்தையை தோளில் தூக்கிப்போட்டுக் கொண்டு நடந்து போனார். சாதாரணமாக, இரண்டு பேர் சேர்ந்து தூக்கும் அளவுக்கு எடை கொண்டது அந்த சிறுத்தை.
அதை, தன்னந்தனி ஆளாக அதுவும் அநாயாசமாக ரஜினி தூக்கியதைப் பார்த்து, படப்பிடிப்பில் இருந்த அத்தனை பேரும் ஆச்சரியத்தில் திகைத்துப் போனார்கள்.
19-10-1979 அன்று ‘அன்னை ஓர் ஆலயம்’ வெளியானது. ரசிகர்களின் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திரையரங்குகள் திணறின. படம் நூறு நாட்களைத் தாண்டி ஓடியது.
– நன்றி முகநூல் பதிவு