இலங்கைக்கு நிதி உதவி செய்ய முடியாது!

உலக வங்கி திட்டவட்டம்

இலங்கையில் வரலாறு காணாத அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களைக்கூட போதிய அளவு இறக்குமதி செய்ய முடியாமல் தவித்து வருகிறது.

நிதி நெருக்கடியை சமாளிக்க உலக வங்கியிடம் கடன்பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கைக்கு நிதி உதவி அளிக்க உலக வங்கி மறுத்துளது.

இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீடித்த பொருளாதாரத்திற்கான திட்டம், பொருளாதார கட்டமைப்பை வகுக்கும் வரையில், இலங்கைக்கு உதவப்போவதில்லை. புதிய நிதி வழங்கும் திட்டம் எதுவும் இல்லை.

இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் அதன் தாக்கம் ஆழ்ந்த கவலை அளிக்கிறது. உலக வங்கி, இலங்கையில் ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கான உதவிகளை வழங்கி வருவதை நிறுத்தப் போவதில்லை” எனத் தெரிவித்துள்ளது.

You might also like