‘கலகத் தலைவன்’ ஆக உதயநிதி ஸ்டாலின்!

மகிழ் திருமேணி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கலகத் தலைவன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் கடந்த மே மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

‘ஆர்டிக்கள் 15’ இந்தி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து, பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்திலும் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலினும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில், உதயநிதி நடிப்பில் தயாராகி உள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை மீகாமீன், தடையறத்தாக்க, தடம் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்திற்கு, ‘கலகத் தலைவன்’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளார். இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஆரவ் இப்படத்தில் உதயநிதிக்கு வில்லனாக நடித்துள்ளார்.

You might also like