சோனியா காந்தி மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் 5 நாட்களுக்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனா்.

அதைத் தொடர்ந்து ஜூன் 8-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில் சோனியா காந்திக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டதால் கால அவகாசம் அளிக்குமாறு அவா் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், அவர் தொற்றில் இருந்து குணமான நிலையில், 21ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி, டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோனியா காந்தி நேற்று விசாரணக்கு ஆஜரானார்.

அவரிடம்  அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சுமார் 3 மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர். சோனியா காந்தியை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்ததைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இந்த நிலையில், வரும் 25 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சோனியாகாந்திக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

You might also like