விக்ராந்த் ரோணா படத்திற்காக 7 நிமிட சிங்கிள் ஷாட் கிளைமாக்ஸ்!

பாட்ஷா கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘விக்ராந்த் ரோணா’ திரைப்படம் இந்தியப் பார்வையாளர்களின் விருப்பப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

ஏற்கெனவே பாடல்கள் ஹிட்டாகியுள்ள நிலையில், பார்வையாளர்கள் திரையரங்குகளில் வெளியீட்டிற்காக ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

குறிப்பாக, அபாரமான அட்வென்சர், அதிரடி சண்டை காட்சிகள் என இப்படம் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்துக்குத் தள்ளியுள்ளது.

இந்த நேரத்தில், கிளைமாக்ஸ் ஆக்‌ஷன் எபிசோட் 7 நிமிட சிங்கிள் ஷாட் காட்சியாக இருக்கும் என்கிறார்கள்.

பெரும் ஆச்சரியங்களையும், கவர்ச்சிகரமான தருணங்களையும் கொண்டிருக்கும் இப்படம் பார்வையாளர்களுக்கு உற்சாகத்தின் உச்சமாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள்.

இயக்குநர் அனுப் பண்டாரி இயக்கத்தில், ஷாலினி ஜாக் மஞ்சு & அலங்கார பாண்டியன் தயாரித்துள்ள, ‘விக்ராந்த் ரோணா’ ஜூலை 28, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

கிச்சா சுதீப், நிருப் பண்டாரி, நீதா அசோக், மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் படத்தில் நடித்துள்ளனர்.

  • பா. மகிழ்மதி
You might also like