இயக்குநர் செல்வராகவன் நடிக்கும் ‘பகாசூரன்’!

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்களின் மூலம் சினிமாகாரர்களையும் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் மோகன்.G. அவர் அடுத்ததாக இயக்கும் படத்திற்கு ‘பகாசூரன்’ என்று பெயரிட்டுள்ளார்.

இந்த படத்தில் இயக்குநர் செல்வராகவன் கதாநாயகனாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் நட்டியும் நடிக்கிறார்கள்.

ராதாரவி, கே.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக தாராக்ஷி நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தமக்கென தனியிடத்தை தக்கவைத்து பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துவரும் சாம் இசையமைத்துள்ளார்.

பழைய வண்ணாரப்பேட்டை, ருத்ரா தாண்டவம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக், இந்த படத்தின் மூலம் இயக்குநர் மோகன் G யுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.

படத்தின் காட்சிகள் வெகு சிறப்பாக வந்துள்ளதாகவும், இதுவரை யாரும் பயணிக்காத கதைக்களத்தில் கதை இருக்கும்.

இந்தப் படம் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இயக்குநர் மோகன் தெரிவித்தார். செப்டம்பரில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

  • பா. மகிழ்மதி
You might also like