தென்னாப்பிரிக்காவில் ஒரு மினி ஐபிஎல்?

அடுத்த வருட தொடக்கத்தில் சிஎஸ்ஏ டி20 தொடரை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தொடங்கவிருக்கிறது.

தென் ஆப்பிரிக்கா நகரங்களுக்கிடையே நடக்கும் இந்த டி20 தொடரில் மொத்தம் ஆறு அணிகள் இடம் பெறுகின்றன.

இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் இந்த ஆறு அணிகளுமே ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களால் வாங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே சிஎஸ்ஏ டி20 தொடர் ஒரு மினி ஐபிஎல் தொடராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தொடருக்கான ஏலம் கடந்த ஜூலை 13ஆம் தேதி அன்று நிறைவடைந்தது. இதில் மொத்தம் 29 முதலீட்டாளர்கள் ஏலம் கேட்டுள்ளனர்.

ஆனால் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களால் கேட்கப்பட்டுள்ள ஏலத்தொகை மற்றவர்களை விட அதிகமாக உள்ளது என்பதால் இந்த தொடரில் விளையாடும் ஆறு அணிகளுமே ஐபிஎல் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸின் அம்பானி குழுமம், சென்னை சூப்பர் கிங்ஸின் என். சீனிவாசன், டெல்லி கேப்பிட்டல்ஸின் பார்த் ஜிண்டால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மாறன் குடும்பம்,

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் சஞ்சீவ் கோயங்கா மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸின் மனோஜ் படாலே ஆகியோர் இந்த தொடரில் விளையாடும் ஆறு அணிகளையுமே வாங்கியுள்ளனர்.

இந்தத் தொடரின் ஏழு முடிவுகள் இந்த மாத இறுதியில் தான் வெளியிடப்படும் என்று தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.

ஆனால் ஆறு அணிகளுமே ஐபிஎல் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று முன்னமே தெரிவித்து, ஆறு ஐபிஎல் உரிமையாளர்களிடமும் அவர்களது அணி தேர்வை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் உரிமையாளர்கள் வாங்கிய ஆறு அணிகள்

மும்பை இந்தியன்ஸ் அணியின் அம்பானி குழுமம் கேப்டவுன் அணியின் உரிமத்தை பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஜோகன்னஸ்பர்க் அணியின் உரிமை வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் டெல்லி கேபிடல்ஸ் அணி உரிமையாளர் வாங்கியிருக்கும் அணி, பிரிட்டோரியாவில் உள்ள செஞ்சூரியனை தளமாகக் கொண்டு பிரிட்டோரியா கேபிடல்ஸ் என்று அழைக்கப்படும்.

கடந்த ஆண்டு ஐபிஎல்லின் புதிய என்ட்ரியான லக்னோ உரிமையைப் பெற்ற சஞ்சீவ் கோயங்கா, டர்பன் உரிமையில் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மீதமுள்ள இரண்டு நகரங்களில், எஸ்ஆர்எச் அணி உரிமையாளர் போர்ட் எலிசபெத் அணியின் உரிமத்தை பெறலாம், அதே நேரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் பார்ல் அணியின் உரிமத்தை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும்தான் அதிக ஏலத்தொகை கேட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு அணிகளின் உரிமையாளர்களும் சுமார் 250 கோடிக்கு மேல் ஏலம் கேட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சிஎஸ்ஏ டி20 தொடரை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தொடங்கிய பொது, இது ஒரு மினி ஐபிஎல் ஆக மாறும் என்று யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

இந்தத் தொடரின் ஏலத்தில் ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் இடம் கேட்க தொடங்கிய பொழுது கூட இந்த தொடரில் உள்ள அனைத்து அணிகளையும் ஐபிஎல் உரிமையாளர்கள் தான் வாங்குவார்கள் என்றும் யாரும் எதிர்பார்க்கவில்லை.

மொயின் அலி விளையாட மாட்டார்

கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோன் உள்ளிட்ட முன்னணி இங்கிலாந்து டி20 வீரர்கள் சிஎஸ்ஏ லீக்கில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இந்தத் தொடரில் சிஎஸ்கே அணி மற்றும் தென்னாப்பிரிக்கா அணி வீரருமான மொயின் அலி விளையாட மாட்டார் என்று தெரிகிறது.

ஏனெனில் இந்த தொடர் நடக்கும் அதே நேரத்தில் தான் யுஏஇ டி20 தொடரும் நடைபெறுகிறது.

ஏற்கனவே யுஏஇ டி20 தொடரில் மொயின் அலி விளையாடுவதாக தெரிவித்துள்ளதால் அவர் சிஎஸ்ஏ டி 20 தொடரில் விளையாட மாட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனமான டு பிளெசிஸ், இந்தத் தொடரில் ஏதாவது ஒரு அணியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் டுவைன் பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரால் வாங்கப்பட்டு இருக்கும் அணியில் விளையாடுவார் என்று தெரிகிறது.

மொத்தத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு மினி ஐபிஎல் தொடரும், அதைத் தொடர்ந்து ஏப்ரலில் மெகா ஐபிஎல் தொடரும் நடைபெறுவதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அடுத்த வருடம் மிகப்பெரிய விருந்தாக அமையும்.

-இளவரசன்

You might also like