விண்மீன் மண்டலத்தில் விசித்திரமான இதயத் துடிப்பு!

விண்மீன் மண்டலத்தில் விசித்திரமான இதயத் துடிப்பு மாதிரியான ஒரு சத்தம் கேட்டதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அறிவியலின்படி வெற்றிடத்தில் ஒலியால் பயணிக்க முடியாது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒலி பரவுவதற்கு மூலக்கூறுகள் அவசியம் என்பதால் விண்வெளியில் ஒருவருக்கு ஒருவர் பேச முடியாது சூழல் இருக்கும்.

இந்நிலையில், விண்மீன் மண்டலத்தில் இருந்து இதயம் துடிப்பது போன்ற ஒரு சத்தம் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருப்பதாக விண்வெளி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த சத்தமானது ரேடியோ வெடிப்பிலிருந்து வரும் சத்தத்தோடு இணைந்து கேட்பதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக அண்டவெளியில் ‘ஹம்’ என்ற சத்தம் கேட்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அண்மையில் வெளியான ஆய்வு ஒன்றில் பூமியில் இருந்து கிட்டத்தட்ட 3 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில், அண்டத்தின் மற்றொரு விண்மீன் மண்டலத்திலிருந்து வரும் விசித்திரமான ரேடியோ சிக்னல் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like