குழந்தைகளின் அழகான உலகத்தைக் காட்டும் மை டியர் பூதம்!

அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை தயாரிப்பில் மஞ்சப்பை பட புகழ் என்.ராகவன் இயக்கியுள்ள திரைப்படம் ‘மை டியர் பூதம்’.

தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு திரைப்படமாக இந்தப் படம் இருக்கும்.

நடிகர் பிரபுதேவா வித்தியாசமான தோற்றத்தில் பூதமாக இப்படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் நாளை வெளியாக உள்ளது.

இந்தப் படம் குறித்து இயக்குநர் என். ராகவன் கூறும்போது, என்னுடைய முதல் படம் மஞ்சப்பை ஒரு ஃபீல் குட் டிராமா, கடம்பன் ஆக்சன் திரைப்படம்.

எனக்கு எல்லா ஜானரிலும் படம் செய்ய வேண்டும் என்பது ஆசை. அதனால் அடுத்த படம் என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் குழந்தைகளுக்கான படம் செய்யலாம் எனத் தோன்றியது.

தமிழில் சினிமாவில் குழந்தைகள் உலகை சொல்லும் படங்கள் இப்போது அதிகமாக வெளியாகவில்லை. அவர்களுக்காக ஒரு படம் பண்ணலாம் என்று தோனியது அப்படி உருவானதுதான் மை டியர் பூதம்.

குழந்தைகள் உலகைப் புரிந்து கொள்வதற்காக முழுக்க என் மகளோடு நிறைய பழகினேன். குழந்தைகள் என்னென்ன விரும்புவார்கள் என தெரிந்து கொண்டேன். அதன் பிறகு தான் இந்த திரைக்கதை எழுதினேன்.

தயாரிப்பாளர் ரமேஷ் பிள்ளையிடம் இந்தக் கதை கூறும் போது அவர் பிரபுதேவா மாஸ்டர் செய்தால் நன்றாக இருக்கும் என்றார்.

நானும் அவரை மனதில் வைத்தே எழுதியிருந்தேன். அதனால் பிரபுதேவா மாஸ்டரிடம் கேட்டோம் அவருக்கு கதை பிடித்து உடனே ஓகே சொல்லி விட்டார். அப்படி தான் இந்த திரைப்படம் ஆரம்பித்தது.

இந்தப்படத்திற்கு பிரபுதேவா மொட்டை போட வேண்டியிருந்தது. அவர் நிறைய படங்கள் செய்து கொண்டிருந்ததால், முதலில் யோசித்தார் கெட்டப் டெஸ்ட் எடுத்து பார்த்த பிறகு அவரே மொட்டை போட்டுக்கொண்டு நடித்தார்.

மொட்டை போட்டு 45 நாட்கள் எங்குமே அவர் தலை காட்டவில்லை. இந்தப்படத்திற்காக முழுக்க அர்ப்பணிப்போடு நடித்து கொடுத்தார்.

அந்த கெட்டப்பில் ரசிகர்கள் அவரை கொண்டாடுவார்கள். இப்படத்தில் குழந்தையாக வரும் அஷ்வந்த கலக்கியிருக்கிறார். பிரபுதேவா சார் இந்தப் பையன் நம்மை தூக்கி சாப்புட்றான்ம்பா என்று புகழ்ந்தார்.

இந்த படத்தில் பரம் குகனேஷ், ஆலியா, சாத்விக், சக்தி, ஆகியோருடன் என்னோட பொண்ணு கேசிதாவும் ஒரு கதாபாத்திரம் செய்துள்ளார். பிக்பாஸ் சம்யுக்தா ஒரு பாத்திரம்.

-யாழினி சோமு

You might also like