அ.தி.மு.க: எம்.ஜி.ஆரின் பேச்சில் முளைத்த விதை!

1972 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி.

திருக்கழுக்குன்றத்தில் கூட்டம்.

பேசியவர் எம். ஜி.ஆர்.

“மக்களின் நம்பிக்கைகளையும், ஆதரவையும் பெற்று ஆட்சிக்கு வந்த நாம் இப்போது அவர்களின் விமர்சனத்திற்கு ஆளாகிவிட்டோம்.

ஆட்சியில் லஞ்ச ஊழல் பெருகிவிட்டதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தி.முக.வினரை மக்கள் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள்.

ஆட்சியிலும், கட்சியிலும் பொறுப்பில் இருப்பவர்கள் மிகக் குறுகிய காலத்திலேயே கார், பங்களா, சொத்துக்கள் என வாழ்கிறார்களே. இவை எப்படி வந்தன என்று மக்கள் கேட்கிறார்கள்.”

தி.மு.க.வுக்குள் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது எம்.ஜி.ஆரின் பேச்சு. எம்.ஜி.ஆருக்கான தொண்டர்கள் அவரை வெகுவாக ஆதரித்தார்கள்.

“அக்டோபர் 12 ஆம் தேதி நடக்க இருக்கிற தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசி முடிவு எடுக்கப்படும்” என்று அறிவித்தார் கலைஞர் கருணாநிதி.

இது தான் அ.தி.மு.க இயக்கம் உருவாவதற்கான விதையை விதைத்த பேச்சு.
*

You might also like