இலங்கையில் கூட்டாட்சி அரசு?

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பல மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, தலைநகர் கொழும்புவில் நேற்று முன் தினம் போராட்டக்காரர்கள் பேரணி சென்றனர். அதிபர் கோத்தபயா வீட்டில் நுழைந்த அவர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர்.

போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

போராட்டத்தின் எதிரொலியாக அதிபர் கோத்தபயா ராஜபக்சே தனது பதவியை வரும் 13-ம் தேதி ராஜினாமா செய்வார் என பாராளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மற்றும் அதிபர் பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் முக்கிய அமைச்சர்கள் பலரும் ராஜினாமா செய்துள்ளனர்.

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.

இதனிடையே, அனைத்துக் கட்சிகள் இணைந்து கூட்டாட்சி அரசை அமைக்க வழிவகுக்கும் வகையில் ராஜினாமா செய்ததாக அவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

You might also like