இரண்டு கைகளும் ஊனமான நிலையில் பிறந்தவர் ஜெசிக்கா காக்ஸ். இவர் வேறுயாருமல்ல. உலகிலேயே இரு கைகளும் இல்லாத முதல் விமான ஓட்டுநர். மனம் இருந்தால் எதிலும் வெற்றி பெறலாம் என்பதை உணர்த்தியவர்.
கைகளால் செய்ய வேண்டிய வேலைகளை கால்களால் செய்தார். கார் ஓட்டுதல், நீச்சலடித்தல் என பல்வேறு துறைகளில் வெற்றி வீராங்கனையாக வலம் வந்தார்.
இருந்தாலும் அவரது வெற்றியின் தாகம் தீரவில்லை. விமானம் ஓட்ட வேண்டும் என ஆசைப்பட்டு, அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டார். ஆனாலும் இவரது உடற்குறையால் எந்த நிறுவனமும் வேலை வழங்கவில்லை.
இறுதியாக ஒரு நிறுவனம் வேலை வழங்கியது. அவ்வளவு தான். விமானத்தை ஓட்டத் தொடங்கினார்.
என்ன ஆச்சர்யம் விமானத்தை ஓட்டினால் போதும் என்ற இருந்த அவர், ஆகாயத்தில் பல சாகசங்களை செய்தார்.
பார்த்தீர்களா… இதுபோல் பலருக்கும் குறைகள் இருக்கலாம். இதை நினைத்து வருந்தினால் வெற்றி பெற முடியுமா…. மனம் இருந்தால் ஜெயிக்கலாம்.
– நன்றி தினமலர் புதிய தொடர் என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.