மற்றவரால் உன் தாய் போற்றப்பட வேண்டும்!

நினைவில் நிற்கும் வரிகள்

******

நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும்
வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழா!

(நான் ஏன் பிறந்தேன்)

குடிச்சி ஒடம்ப கெடுத்துகிட்டு
வீணா பொழுத போக்குறீங்களே
இந்த நேரத்துல நாட்டுக்கு
எதாவது நல்லது செய்ய கூடாதா

நாடென்ன செய்தது நமக்கு
என கேள்விகள் கேட்பது எதற்கு

நீயென்ன செய்தாய் அதற்கு
என நினைத்தால் நன்மை உனக்கு

                   (நாடென்ன…)

(நான் ஏன் பிறந்தேன்)

மலையில் பிறந்த நதியால்
மக்கள் தாகம் தீர்ந்தது
மரத்தில் பிறந்த கனியால்
அவர் பசியும் தணிந்தது

                      (மலையில்…) 

கொடியில் பிறந்த மலரால்
எங்கும் வாசம் தவழ்ந்தது
அன்னை மடியில் பிறந்த உன்னால்
என்ன பயன்தான் விளைந்தது

(நான் ஏன் பிறந்தேன்)

பத்துத் திங்கள் சுமந்தாளே
அவள் பெருமைப் படவேண்டும்
உன்னைப் பெற்றதனால் அவள்
மற்றவராலே போற்றப்பட வேண்டும்!

கற்றவர் சபையில் உனக்காக
தனி இடமும் தர வேண்டும்
உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும்
உலகம் அழ வேண்டும்

(நான் ஏன் பிறந்தேன்)

– எம்.ஜி.ஆர் நடிப்பில் 1972-ம் ஆண்டு வெளிவந்த ‘நான் ஏன் பிறந்தேன்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. இசை: சங்கர் கணேஷ், குரல்: டி.எம். சௌந்தரராஜன். இயக்கம்: எம்.கிருஷ்ணன் நாயர்.

You might also like