சகித்துக் கொள்வது தான் வாழ்க்கையின் அடிப்படை!

– பாலகுமாரன்

வீட்டில் மனைவியை சகித்துக் கொள்ள முடியாதவர் வெளியே பொது மக்களை, போலீஸ்காரரை, பொறுக்கிகளை பல் காட்டி நிறைய சகித்துக் கொள்வார்கள்.

அது சகித்துக் கொள்வதாக அவருக்கு தெரியவே தெரியாது. எங்கு தன்னுடைய அதிகாரம் செல்லுமோ அங்கு சகித்து கொள்ளாமல் சீறி வருவதுதான் பண்பாக, பழக்கமாக இருக்கிறது.

சகித்துக் கொள்ள என்ன வேண்டும் தெரியுமா நண்பரே, தன் மீது பிரியம் வேண்டும். தான் என்ன செய்கிறோம் என்கிற தெளிவு வேண்டும். தன் மீது பிரியம் உள்ளவருக்குத் தான் செய்து கொண்டிருக்கிற விஷயம் தெளிவாக தெரியும்.

தன் எண்ணங்கள் எத்தகையவை என்று எடைபோட்டு உடனே இறக்க முடியும். தன்னை ஒவ்வொரு செயலிலும் எடை போட்டு இறக்கி, தான் யார் என்று தெளிவாக தெரிகிறவருக்கு மற்றவரை சகித்துக் கொள்வது விஷயமே அல்ல. சகித்து கொள்ளல் தான் வாழ்க்கையின் அடிப்படை.

You might also like