வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக் கோள்கள்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவை பொறுத்தவரை சமீப காலங்களாக வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அண்டை நாடுகளுக்கான செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் பணியை செய்து வருகிறது.

அதன் அடிப்படையில் நேற்று பிஎஸ்எல்வி சி-53 என்ற ராக்கெட் மூலமாக சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான தனியார் நிறுவனம் மற்றும் பல்கலைகழகங்கள் அனுப்பக்கூடிய 3 செயற்கைகோள்களை புவியின் சுற்றுவட்ட பாதையில் விண்ணில் செலுத்தியது.

முன்னதாக இதற்கான  25 மணி நேர கவுண்டவுன் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு துவங்கியது. இதைத் தொடர்ந்து மாலை 6.02 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த செயற்கைக்கோள் அதிக தெளிவு திறன் மற்றும் ஒரே நேரத்தில் பல கோணங்களில் பூமியை படம் எடுக்கும் வசதி கொண்டது. 44.4 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் பூமியில் இருந்து 570 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட்டு,

கடல்சார் பாதுகாப்பு, பேரிடர் மீட்பு, பேரிடர் மீட்புக்கு தேவைப்படும் மனித வளங்களைக் கண்டறிவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று விண்ணில் செலுத்தப்பட்ட இந்த 3 செயற்கைக்கோள்களும் புவிவட்ட சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like