ஆண்டுக்கு 50,000 கோடி அளவுக்கு உற்பத்தி நடைபெறும் திருப்பூர்!

இந்திய ஏற்றுமதியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒன்றிய ஜவுளி மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு பாராட்டு விழா மற்றும் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுடனான கலந்துரையாடல் திருப்பூரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தொழில்துறையினர் தங்களது கருத்துகள், கோரிக்கைகள் குறித்து ஒன்றிய அமைச்சருடன் கலந்துரையாடினர். இதில் ஒன்றிய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய பியூஷ் கோயல், “திருப்பூரில் உள்ள ஜவுளித்துறை நிறுவனங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது.

அடுத்து ஐந்தாண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதியுடன் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்துறையாக மாறும் வலிமை உள்ளது.

இந்தியா ஆண்டுக்கு 8 சதவிகிதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்தால், 30 ஆண்டுகளுக்கு பின் இந்தியா 30 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக உருவெடுக்கும்.

நாட்டில் ஜவுளித் துறையில் மிகவும் வெற்றிகரமான ஒரு தொழில் மையமாக திருப்பூர் விளங்கி வருவதுடன், தற்போது ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு உற்பத்தி நடைபெறுகிறது” என பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.

You might also like