நீதிக்கு தலைவணங்கும் நீதிதேவன்!

நீதி என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்று. அரசனுக்கு ஒரு நீதி, ஆண்டிக்கு ஒரு நீதி! என்ற வேறுபாடு அதிலே கிடையாது. படித்தவனுக்கு ஒரு நீதி, படிக்காதவனுக்கு ஒரு நீதி! என்ற பாகுபாடும் கிடையாது. யாராக இருந்த போதிலும் நீதிக்குத் தலைவணங்கியே வாழ வேண்டும்.

சமுதாய நீதி என்பது அரசின் சட்டத்தால் காப்பாற்றப்பட்டு வருகிறது. ஆனால், சட்டத்தைவிட நீதியைப் காப்பாற்றும் வல்லமை மிக்க உயர்ந்த சாதனம் அவரவர் மனசாட்சி தான். சட்டங்கள் மனிதர்களால் உருவாக்கப்படுகிறது.

ஆனால் மனசாட்சி, இயற்கை நமக்களித்த நன்கொடை. தங்களுக்குள்ள பதவி மற்றும் பண பலத்தாலோ அல்லது அதிகார ஆணவத்தாலோ, சட்டத்தின் பிடியிலிருந்து சிலர் தப்பி வாழலாம். அதன் மூலம் நீதியையே தலைகுனிய வைத்துவிட்டதாகவும் எண்ணலாம்.

ஆனால், அவரவர் மனசாட்சியின் குரல் விசுவரூபம் எடுக்கும்போது அதிலிருந்து ஒருக்காலும் அவர்கள் தப்ப முடியாது. செய்த தவறுகளுக்காகவும், தவறுகளை மறைத்த பாவத்திற்காகவும், ஒன்றுக்கு இரண்டாக தண்டனை அடைந்தே தீருவார்கள்.

– புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

You might also like