எப்போதும் நல்லோர்க்கு துணையிருப்பேன்!

நினைவில் நிற்கும் வரிகள்:

****

நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால் இங்கு
ஏழைகள் வேதனைப்பட மாட்டார்
உயிர் உள்ள வரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்!

(நான் ஆணையிட்டால்)

ஒரு தவறு செய்தால் அதைத்
தெரிந்து செய்தால் அவன் தேவன்
என்றாலும் விடமாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன் – அதில்
பிழைக்கச் சொல்வேன்!
அவர் உரிமைப் பொருள்களை
தொட மாட்டேன்!

(நான் ஆணையிட்டால்)

சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும்
வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்!

ஒரு மானமில்லை
அதில் ஈனமில்லை அவர்
எப்போதும் வால் பிடிப்பார்
எதிர் காலம் வரும்
என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின்
ஆட்டத்தை ஒழிப்பேன்…
பொது நீதியிலே
புதுப் பாதையிலே – வரும்
நல்லோர் முகத்திலே விழிப்பேன்.

(நான் ஆணையிட்டால்)

இங்கு ஊமைகள் ஏங்கவும்
உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்!
ஒரு கடவுள் உண்டு
அவன் கொள்கை உண்டு
அதை எப்போதும் காத்திருப்பேன்
முன்பு ஏசு வந்தார்
பின்பு காந்தி வந்தார்
இந்த மானிடர் திருந்திட பிறந்தார்..!

இவர் திருந்தவில்லை
மனம் வருந்தவில்லை
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்..!

(நான் ஆணையிட்டால்)

-1965-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் வாலி.

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்,
குரல்: டி.எம். சௌந்தரராஜன்.

You might also like