எந்த நிலையிலும் நெறி தவறாத எண்ணம் தேவை!

நினைவில் நிற்கும் வரிகள்:

*****

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை

(மூன்றெழுத்தில்)

பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா

அன்பே உன் அன்னை
அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில்
ஒன்றே உன் தேவன்

(மூன்றெழுத்தில்)

வாழை மலர் போல
பூமி முகம் பார்க்கும்

கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும்
இன்று போனாலும்

கொள்கை நிறைவேற்று தோழா

அன்பே உன் அன்னை
அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில்
ஒன்றே உன் தேவன்

(மூன்றெழுத்தில்)

1964-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த ‘தெய்வத் தாய்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. இசை: எம்.எஸ்.விஸ்வநாதன், குரல்: டி.எம். சௌந்தரராஜன். இயக்கம் : பி.மாதவன்

You might also like