யோகிபாபு நடிப்பில் உருவாகும் பான் இந்தியா படம்!

காமெடி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் பல ஹிட் படங்களை கொடுத்துவரும் யோகி பாபு, முதல்முறையாக இந்திய அளவிலான திரைப்படத்தில் நடிக்கிறார்.

‘வீரப்பனின் கஜானா’ என்ற தலைப்பில் வளர்ந்துவந்த இப்படம் தற்போது ‘கஜானா’ என்ற பெயர் மாற்றத்துடன் ஹாலிவுட் படங்களுக்கு இணையான தரத்தில் சாகச காட்சிகள் நிறைந்த படமாக உருவாகிறது.

இண்டியானா ஜோன்ஸ், நேஷ்னல் டிரஸ்சர் போன்ற சாகச ஹாலிவுட் படங்களுக்கு இணையான, மாயமந்திர காட்சிகளும், யானை, புலி, பாம்பு போன்ற மிருகங்களின் சாகசக் காட்சிகளோடு மிக பிரம்மாண்டமான படமாகத் தயாரிக்கப்படுகிறது.

வேதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுவரை நடனத்திற்காக பாராட்டு பெற்ற அவர், அதிரடி ஆக்‌ஷன் மற்றும் பல சாகசக் காட்சிகளிலும் நடித்துள்ளார். அந்தக் காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருப்பதோடு, ரசிகர்களை வியக்கவைக்கும் வகையில் உருவாகியிருக்கிறதாம்.

வேதிகா ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருப்பதோடு, ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அழகில் கிரங்கடிக்கவும் செய்வார்.

இனிகோ பிரபாகர், சாந்தினி, பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் இயக்குகிறார்.

பா.மகிழ்மதி

You might also like