கவிதைப் பக்கம்:
நகரும் நிழலை
மிதிக்க முடியாமல்
பாதம் தள்ளாடுகிறது
மனசோ நிஜத்தை
நையாண்டி செய்து
தாறுமாறாய் சிரிக்கிறது.
நிஜமாகவே
நேசத்துடனான புரிதலை
புரிந்து கொள் நிழலே என
பாதம் மேலும் போராடுகிறது.
இப்படியே
இருள் வந்து சேர்ந்தது.
களைத்துப்போன கால்கள்
சம்மணமிட்டு உட்கார்ந்தது.
நிழல் சொன்னது
நான் உன்னிலிருந்து தொடங்கி
உன்னிலேயே முடிகிறேன்
என்னை வேறொன்றாய் நினைத்து
தொட முயன்றால் விடுவேனா?
நேசம் என்பது எப்போதும்
கரையாத நிழல்கள்.
– கே.வி.ராஜேந்திரன்
- நன்றி: பிரமிள் இணையப் பக்கம்