15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் குஜராத் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் அணி கோப்பையைக் கைப்பற்றியது.
இதன் இறுதிப்போட்டிக்கு முன்பாக 45 நிமிடங்கள் நிறைவுவிழா கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இந்தி நடிகர் ரன்வீர்சிங் நடனம் ஆடினார்.
இதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசைவெள்ளத்துக்கு மத்தியில் சக கலைஞர்களுடன் இணைந்து ஜெய்ஹோ உள்ளிட்ட பாடல்களை உற்சாகமாக பாடி ரசிகர்களைப் பரவசப்படுத்தினார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இந்திய கிரிக்கெட் வாரியத்தால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் உடை (ஜெர்சி) மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த உடையில் 10 அணிகளின் லோகோ மற்றும் 15-வது ஐ.பி.எல். என்ற பொறிக்கப்பட்டிருந்தது. 66 மீட்டர் நீளமும் 42 மீட்டர் அகலமும் கொண்ட இந்த உடை தான் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஜெர்சி என்ற வகையில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.