ஆசை இல்லா மனிதனை துன்பம் நெருங்காது!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!

உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே

சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!

அன்பில் வாழும்
இதயம் தன்னை தெய்வம்
கண்டால் வணங்கும்
எங்கே சொல்லு!

ஆசை இல்லா மனிதர் தம்மை
துன்பம் எங்கே நெருங்கும்
பொன்னில் இன்பம் புகழில் இன்பம்
என்றே நெஞ்சம் மயங்கும்

பூவைப் போலே சிரிக்கும் உன்னைக்
கண்டால் உண்மை விளங்கும்!
(சிரித்து வாழ)

முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே
முள்ளுக்கு
என்ன பெருமை
சிப்பிக்குள்ளே
பிறந்ததாலே
முத்துக்கு என்ன சிறுமை!

எங்கே நன்மை இருந்த போதும் ஏற்றுக்
கொள்ளும் உலகம் அங்கே வந்து
தழுவிக் கொண்டு போற்றும் நல்ல இதயம்!

(சிரித்து வாழ)

வானில் நீந்தும் நிலவில்
நாளை
பள்ளிக் கூடம் நடக்கும்
காற்றில் ஏறி பயணம் செல்ல
பாதை
அங்கே இருக்கும்
பாதை அங்கே இருக்கும்!

எங்கும் வாழும் மழலைச் செல்வம்
ஒன்றாய் சேர்ந்து படிக்கும்
இல்லை ஜாதி மதமும் இல்லை
என்றே பாடிச் சிரிக்கும்!

(சிரித்து வாழ)

-1973-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் புலமைப்பித்தன்.

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்,

குரல்: டி.எம். சௌந்தரராஜன்.

You might also like