சுகாதார அமைப்புத் தலைவராக டெட்ராஸ் மீண்டும் தேர்வு!

உலக சுகாதார அமைப்பின் தலைவராக, ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவைச் சேர்ந்த டெட்ராஸ் அதானோம் கேப்ரியாசிஸ் 2017ல் பதவியேற்றார்.

எத்தியோப்பிய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த இவர், உலக சுகாதார அமைப்பின் தலைவராக பதவியேற்ற முதல் ஆப்ரிக்க நாட்டவர் என்ற பெருமையை பெற்றார்.

டாக்டராக இல்லாத ஒருவர் இந்தப் பதவியை வகித்ததும் இதுவே முதல் முறையாகும்.

அவருடைய பதவிக் காலம் முடிய உள்ள நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளியானது.

ஆனால், யாரும் போட்டியிடாததால் அவர் ஐந்து ஆண்டுகளுக்கு, இந்தப் பதவிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

You might also like