நினைவில் நிற்கும் வரிகள்:
***
மலரோடு விஷநாகம் பிறப்பதாலே – அந்த
மலரையே தள்ளிவைக்கும்
வழக்கம் உண்டோ? – தன்
நிலையறியா இளையவனின்
தவறினாலே – அவன்
இனத்தையே உதாசீனம்
செய்தல் நன்றோ?
நீதி இதுதானா? நேர்மை இதுதானா?
நெறியோடு வாழ்வோரின்
நிலையே இதுதானா?
(நீதி)
சிற்றன்னை கைகேயி பிடிவாதத் தாலே
ஸ்ரீராமன் முன்னாளில் காடாளப் போனான்
சேய்களுடன் வீணான அபவாதத் தாலே – இவன்
திருநாட்டை ஆளாமல் நாடோடி யானான்
நெறியோடு வாழ்வோரின் நிலையே இதுதானா
(நீதி)
– 1956ஆம் ஆண்டு எம்.கே.ராதா நடிப்பில் வெளிவந்த ‘பாசவலை’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
இசை : விஸ்வநாதன் – ராமமூர்த்தி,
குரல் : P.B. ஸ்ரீனிவாஸ்,
இயக்கம் : எ.எஸ். நாகராஜன்.