சிங்கப்பூரில் எம்.ஜி.ஆர் பெயரில் டெய்லர் கடை!

சிங்கப்பூரில் ஒரு தையற்காரர், ‘எம்.ஜி.ஆர் பேஷன் டெயிலர்’ என்று கடை நடத்தி வந்திருக்கிறார்.

மக்கள் திலகம் அவர்கள் திரைப்படங்களில் அணியும் உடைகளைப் போன்றே உடைகளைத் தைத்து சிங்கப்பூர் மக்களிடையே பிரபலமானார்.

அவர் ஒரு சமயம் மக்கள் திலகத்தை காண இந்தியா வந்தார். பார்த்தார்.

“காணாதது தான் தெய்வம், நீங்கள் என் கண்கண்ட தெய்வம். தெய்வம்னா காணிக்கை செலுத்தணுமாம். நானும் ஒரு காணிக்கை கொண்டு வந்திருக்கிறேன்” என்று ஒரு சூட் கொடுத்தார்.

“அளவு எது? நாயுடு கொடுத்தாரா?” – என்று கேட்டார் மக்கள் திலகம்.

”இல்லை, ஒரு உத்தேசம் தான். என் மனக்கணக்கால் பார்த்து வெட்டி தச்சேன்” என்று போடச் சொன்ன டெய்லர், அத்தோடு ரூ.20,000 பணமும் எம்.ஜி.ஆரிடம் கொடுத்தார்.

“எதற்கு?” என்று மக்கள் திலகம் கேட்க, “உங்க பெயரில் உங்களைக் கேட்காம கடை நடத்தறேன், நூத்துக்கு ஒரு டாலர் வீதம், உங்க பங்குக்கு சேர்ந்த பணம். இதுவும் என் காணிக்கை” என்றார் அந்த சிங்கப்பூர் டெய்லர்.

மக்கள் திலகம் அந்தப் பணம் இருந்த தட்டை தொட்டு முத்தமிட்டு, தனது பெட்டியிலிருந்து 5,000 ரூபாய் எடுத்து அதே தட்டில் இருந்த 20,000 ரூபாய்க்கு மேல் வைத்து, ”என் பேர்ல நடத்தி தோல்வியடையாமல் வெற்றியடைஞ்ச உங்க உழைப்புக்கு நான் தர்ற வெகுமதி… எடுத்துக்குங்க” என்று கூறியிருக்கிறார் மக்கள் திலகம் அவர்கள்.

இது தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை மக்கள் இன்றும் கடவுளாகக் கொண்டாடுவதற்குக் காரணம்.

– நன்றி: முகநூல் பதிவு.

You might also like