நம்பிக்கையைக் குலைத்தவன்!

தூரத் தொலைவில்
அந்த நடையைக் கண்டேன்
அச்சு அசல் என் நண்பன்.
மறைந்தவன் எப்படி
இங்கு வரக்கூடுமெனத்
திடுக்கிட்டேன்.
வேறு யாரோ…
அப்படி எண்ணாதிருந்தால்
அவனே வந்திருப்பான்.

– சுந்தர ராமசாமி

You might also like