உதவும் நெஞ்சம் கொண்டவர்கள் கொஞ்சம் பேர் தான்!

நினைவில் நிற்கும் வரிகள்:

உண்மையைச் சொன்னவனை
உலகம் வெறுக்குமடா

உதவிசெய்ய நினைத்தால்
உள்ளதையும் பறிக்குமடா

உள்ளத்தைக் கல்லாக்கி
ஊமைபோல் வாழ்ந்துவிட்டால்

நல்லவன் இவனென்று – உன்னை
நடுவில் வைத்து போற்றுமடா

இன்ப உலகில் செல்வமதிகம்
இதயந்தான் கொஞ்சம்

அன்பு இதயந்தான் கொஞ்சம்
இதயமுள்ள மனிதன் கையில்
உதவும் பொருள் பஞ்சம்

இன்று உதவும் பொருள் பஞ்சம்

(இன்ப…)

இரக்கம் கொண்டவனை செல்வம்
எதிரியென்றே சொல்லுதடா
இல்லையென்றே ஏங்கும் நிலையில்
யுதைத்தே தள்ளுதடா

(இன்ப…)

தேனாறு பாயுது வயலில்
செங்கதிரும் சாயுது
ஆனாலும் மக்கள் வயிறு காயுது
அதிசயம் தான் இது
வகையாக இந்த நாட்டில் – என்று
மாற்றம் உண்டாகுமோ? – கலைந்த
கூட்டம் ஒன்றாகுமோ?

(இன்ப…)

– 1960 ஆம் ஆண்டு எம்.ஆர். ராதா நடிப்பில் வெளிவந்த ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

இசை :  விஸ்வநாதன் – ராமமூர்த்தி

இயக்கம் : T.R. ராமண்ணா

குரல் : சீர்காழி கோவிந்தராஜன்.

You might also like