தயாரிப்பாளர் ஏவி.எம். செட்டியார் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருப்போம். அதிலும் அவரது தீக்கமான சிந்தனையும், தெளிவான பேச்சுத்திறனும் மிகவும் குறிப்பிட வேண்டும்.
அதற்கு ஒரு உதாரணம்.
பணியாளர்களுக்கு அவர் கொடுக்கும் ஒவ்வொரு இன்ஸ்ட்ரக்ஷனும் எந்தக் குழப்பமும் வர வாய்ப்பே இல்லாத அளவுக்குத் தெளிவாக இருக்குமாம்.
“காரை எடுத்திட்டு பெட்ரோல் போட்டுட்டு ஸ்டுடியோவுக்கு வா” என்று டிரைவருக்கு உத்தரவு போட மாட்டாராம்.
“ஒயிட் கலர் அம்பாசிடரை எடுத்திட்டு, பத்து லிட்டர் பெட்ரோல் போட்டுட்டு, ஏவி.எம். ஸ்டுடியோ முதல் வாசல்ல வந்து பத்து மணிக்கு நில்லு” என்றுதான் உத்தரவு இருக்குமாம்.
“நான் எந்தக் காரைச் சொன்னா, நீ எத எடுத்துட்டு வந்து, எங்க நீக்கற…” என்ற புலம்பல்கள் வரவே வாய்ப்பிருக்காதாம்.
இது ஒரு மிக முக்கியமான மேனேஜ்மென்ட் டெக்னிக்.
நன்றி: முகநூல் பதிவு