– ஐ.நா. அதிகாரப்பூர்வ தகவல்
உக்ரைன்-ரஷ்யா ஆகிய இரு நாடுகள் இடையே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கடும் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரு நாடுகளும் தங்களது ராணுவ வீரர்களின் உயிரிழப்பு குறித்த சரியான தகவல்களை வெளியிட மறுக்கின்றன.
அப்பாவி குடிமக்கள் பலர் இந்த ராணுவ தாக்குதலில் பலியாகி இருக்கலாம் என கூறப்படும் நிலையில், ஐ.நா. மனித உரிமை ஆணையம் எத்தனை குடிமக்கள் இந்த போரில் இறந்தார்கள் என்று தொடர்ந்து கண்காணித்து வந்தது. இதையடுத்து தற்போது ஐநா., சார்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
தகவலின்படி இந்தப் போரில், 3 ஆயிரத்து 153 குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.
நிமிடத்துக்கு நிமிடம் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் இந்த நிமிடத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் கூடியிருக்க வாய்ப்புள்ளது என்றும் ஐநா தகவல் அளித்துள்ளது.
பெரும்பாலான மக்கள் வெடிபொருட்கள் தாக்குதல், ஏவுகணைத் தாக்குதல், வான்வழித் தாக்குதல் ஆகியவற்றில் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.