புது உலகைப் படைக்கும் புனிதர்களே…!

நினைவில் நிற்கும் வரிகள்:

****

உழைக்கும் கைகளே
உருவாக்கும் கைகளே
உலகை புது முறையில்
உண்டாக்கும் கைகளே

(உழைக்கும்…)

ஆற்று நீரை தேக்கி வைத்து
அணைகள் கட்டும் கைகளே
ஆண்கள் பெண்கள் மானம் காக்க
ஆடை தந்த கைகளே
சேற்றில் ஓடி நாற்று நட்டு
களை எடுக்கும் கைகளே
செக்க வானம் போல என்றும்
சிவந்து நிற்கும் கைகள்
எங்கள் கைகளே!

(உழைக்கும்…)

பலன் மிகுந்த எந்திரங்கள்
படைத்து விட்ட கைகளே
பாதை போட்டு உலகை ஒன்றாய்
இணைத்து வைத்த கைகளே
பாரில் உள்ள பெருமை யாவும்
படைத்ததெங்கள் கைகளே
பச்சை ரத்தம் வேர்வையாக
படிந்து நிற்கும் கைகள்
எங்கள் கைகளே!

(உழைக்கும்…)

உலகம் எங்கும் தொழில் வளர்க்கும்
மக்கள் ஒன்றாய் கூடுவோம்
ஒன்று எங்கள் ஜாதி என்று
ஓங்கி நின்று பாடுவோம்!

சமயம் வந்தால் கருவி ஏந்தி
போர் முனைக்கு ஓடுவோம்
தர்ம நீதி மக்கள் ஆட்சி
வாழ்கவென்றே ஆடுவோம்!
நாம் வாழ்கவென்றே ஆடுவோம்!

– 1966 ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த ‘தனிப்பிறவி’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் கண்ணதாசன்.

இசை: K.V. மகாதேவன், குரல்: T.M. சௌந்தரராஜன்.

You might also like