எல்லோருக்கும் உலகம் ஒன்றுதான்!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

ஊருக்கெல்லாம் ஒரே சாமி
ஒரே சாமி ஒரே நீதி
ஒரே நீதி ஒரே ஜாதி
கேளடி கண்ணாத்தா

மூச்சுக்கெல்லாம் ஒரே காத்து
ஒரே காத்து ஒரே தண்ணி
ஒரே வானம் ஒரே பூமி
ஆமடி பொன்னாத்தா

எல்லோருக்கும் உலகம் ஒண்ணு
இருளும் ஒண்ணு ஒளியும் ஒண்ணு
இன்னும் சொன்னா நீயும் ஒண்ணு
நானும் ஒண்ணுதான்

யாருமேலே கீறினாலும்
ரத்தம் ஒண்ணுதானே
ஆகமொத்தம் பிறந்ததெல்லாம்
பத்தாம் மாதம் தானே

உயிருக்கெல்லாம்
ஒரே பாதை ஒரே பாதை
ஒரே வாசல் ஒரே கூடு ஒரே ஆவி
பாரடி கண்ணாத்தா

பாடுபட்டோர் கொஞ்சமில்லே
பலன் வெளைஞ்சா பஞ்சமில்லே
ஆடும் மாடும் நாமும் வாழ
அருள் புரிவாயே
அம்மா அருள் புரிவாளே

அங்காளம்மன் கோவிலுக்குப்
பொங்க வைக்க வேணும்
அன்னையவள் எங்களையும்
பொங்க வைக்க வேணும்

ஆளுக்கெல்லாம்
ஒரே கோயில் ஒரே கோயில்
ஒரே பூஜை ஒரே நியாயம் ஒரே தீர்ப்பு
கேளடி கண்ணாத்தா

1960 ஆம் ஆண்டு சத்யன், டி.எஸ். முத்தையா நடிப்பில் வெளிவந்த ‘ஆளுக்கொரு வீடு’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

இசை : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

குரல் : K. ஜமுனாராணி, L.R. ஈஸ்வரி

இயக்கம் : M. கிருஷ்ணன்

You might also like