நினைவில் நிற்கும் வரிகள்:
****
அவனியெல்லாம் புகழ் மணக்கும்
அருமைக் காஞ்சி நகரம் – நம்ம
அருமைக் காஞ்சி நகரம் – அது
அழகுக் கெல்லாம் சிகரம்
(அவனியெல்லாம்)
தோரணம் கட்டிய வீதியிலே – தங்கத்
தேரோடி வரும் வேளையிலே
தோகை மயிலென ஆடிடுவோம் – காஞ்சித்
தரணியை வாழ்த்தியே பாடிடுவோம்
(அவனியெல்லாம்)
குலைவாழை தன்னை
தானே விலை கூறுது – கரும்புக்
கூட்டத்திலே தென்றல் வந்து நடை போடுது
மலையெல்லாம் கவிதை பொங்கும்
சிலையாகுது – நம்ம
மகராசன் கனவு இங்கே நிறைவேறுது
(அவனியெல்லாம்)
வலைவீசி மீன் பிடிக்க கடலிருக்கு – நீ
விளையாட பல்லவத்தின் மடியிருக்கு
கலைக்காக நரசிம்மன் துணையிருக்கு – கண்ணே
கனியமுதே உன்னால் எந்தன் உயிரிருக்கு.
– 1963-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘காஞ்சித் தலைவன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் ஆலங்குடி சோமு.
இசை : கே.வி. மகாதேவன். குரல் : எல்.ஆர்.ஈஸ்வரி, பொன்னுசாமி குழுவினர்.