ஆங்கிலக் கவிஞரும், உலகின் மிகச்சிறந்த நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் 1564-ம் ஆண்டு முதல் 1616-ம் ஆண்டு வரை வாழ்ந்தவர்.
நகைச்சுவை மற்றும் சோகம் ஆகிய இரண்டையும் தனது நாடகத்தில் பிரதிபலித்தவர். இவரது நாடகங்கள் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, நடத்தப்பட்டும் வருகின்றது.
சிந்தனையாளர் ஷேக்ஸ்பியரின் பொன்மொழிகள் சில…!
உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வது தான் வளர்ச்சியின் அடையாளம்.
பொற்காலம் என்பது நமக்கு முன்னாள் உள்ளதே தவிர நமக்கு பின்னால் இல்லை.
அனுபவம் ஓர் உயர்ந்த நகை. அது அறியதாகத்தான் இருக்கும். ஏனெனில் மிகவும் கூடுதலான விலை கொடுத்தே அதை வாங்க வேண்டியதாயிருக்கின்றது.
வாழ்வென்னும் ஆடையில் இன்பம், துன்பம் என்னும் இரு நூல்களும் இருக்கவே செய்யும்.
எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள், சிலரிடம் நம்பிக்கை வையுங்கள். யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள்.
நீ செல்லும் பாதையைச் சரியாகத் தேர்ந்தெடு. பிறகு அந்தப் பாதையில் உன் பயணத்தைத் தொடங்கு.
மனிதனின் கெட்ட குணங்களை வெறுத்துவிடு; ஆனால், மனிதனை வெறுக்காதே.
பழிவாங்குதலைக் காட்டிலும் மன்னித்தல் நிச்சயமாக பெருமை உடையது.
நீ போக வேண்டிய இடத்திற்கு மூன்று மணி நேரம் முன் கூட்டியே கூட சென்றுவிடலாம். ஆனால் ஒருநிமிடம் கூட பின்தங்கி விடக்கூடாது.
கருணைதான் பெருந்தன்மையின் அடையாளம்.
தைரியமே நம்முடைய மிக நெருங்கிய நண்பன்.
வெறும் அதிர்ஷ்டத்தை மட்டும் தேடி ஓடும் போதுதான், நாம் கால்கள் இடறி விழுந்துவிடுகிறோம்.
உங்களைத் தவிர வேறு எந்த மனிதரையும் கண்டு நீங்கள் எச்சரிக்கையாக இருக்கத் தேவையில்லை.
பலவற்றை கேளுங்கள், ஒரு சிலவற்றை மட்டும் பேசுங்கள்.
சுருங்கச் சொல்வதே பேச்சுத்திறனின் உயிர்நாடி.
நீங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள், பின்பு உங்கள் நேரத்தை அது வீணாக்கும்.
துன்பங்கள் வரும்போது தனியாக வருவதில்லை, அவை மொத்தமாகவே வருகின்றன.
மாறுதல் கண்டவுடன் மாறும் அன்பு அன்பாகாது.
மனதில் திருப்தி ஏற்பட்டிருந்தால் வாழ்வில் வறுமை வந்தாலும் அது வறுமையாகத் தெரியாது.
ஏழையானாலும் உள்ளத்தில் போதிய திருப்தி இருப்பின் அதுவே பெரிய செல்வமாகும்.
தர்ம காரியங்கள் எதுவும் செய்யாமல் பெறப்படும் புகழ் அழியக்கூடியது.
நல்லதொன்றும் கெட்டதொன்றும் எதுவுமில்லை. நாம் நினைப்பதுதான் அதை அவ்வண்ணம் ஆக்குகிறது.
இனிய நண்பா, ஒரு சிறிது நேரம் உன்னைப்பற்றி நான் எண்ணினால், என் இழப்புகள் அனைத்தும் மீட்கப்பட்டு, என் வேதனைகள் தீர்கின்றன.
மனிதனின் தீய குணங்களைப் பித்தளைத் தட்டில் பொறிக்கிறோம். அவர்களின் நற்குணங்களை ஓடும் தண்ணீரில் எழுதுகிறோம்.
தீமையான வார்தைகளால்தான் தீமையான செயல்களும் இரட்டிப்பாகி விடுகின்றன.