முதுகிலே குத்தும் பழக்கம் எம்.ஜி.ஆருக்கு இல்லை!

– மக்கள் திலகத்தைப் பற்றி கவிஞர் கண்ணதாசன் சொன்னவை.

நிர்வாகத் திறமையில் எம்.ஜி.ஆர். ஒரு சர்ச்சிலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால்
ஜனங்களின் மனோ பாவத்தைக் கணிப்பதில் எப்போதுமே அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

நான் மதுரை வீரனையோ, மன்னாதி மன்னையோ, ராஜா தேசிங்கையோ, நாடோடி மன்னனையோ சந்திக்கவில்லை. மக்களின் விசுவாசத்திற்குப் பாத்திரமான ஒரு மகா மனிதனைத்தான் அப்போது சந்தித்தேன்.

எழுதினால் கண்ணதாசன்தான் எழுத வேண்டும் என்று அவர் சொன்ன காலங்களும் உண்டு. கண்ணதாசன் எழுத வேண்டாம் என்று மறுத்த காலங்களும் உண்டு. ஆனால் கவிதையில் அவர் என்னை ரசித்ததைப் போல வேறு யாரையும் ரசித்ததில்லை.

எதிரி என்றால் எதிரி. நண்பன் என்றால் நண்பன் என்பதே அவரது கொள்கை. நண்பன் என்று சொல்லிக் கொண்டே முதுகிலே குத்தும் பழக்கம் அவருக்கு இல்லை.

ஒரு படத்தில் அவருக்காக நான் வசனம் எழுதினேன். என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டே தவிர, நம்பிக் கெட்டவர்கள் இல்லை என்று. அது இன்று பலிக்கிறது. அவருடைய ஜாதகம் அசுர ஜாதகம். விழுவதுபோலத் தெரியும். எழுந்து விடுவார். நீண்ட கால வீழ்ச்சியை அவர் சந்தித்ததே இல்லை.

***

– மேஜர்தாசன் என்ற தேவாதிராஜன் எழுதிய, ’எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர்’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.

You might also like