உலக வங்கி அறிக்கை நாட்டில் 2011 – 19 காலகட்டத்தில் தீவிர வறுமையின் அளவு 12.3 சதவீதம் குறைந்துள்ளதாக உலக வங்கி கூறி உள்ளது.
இதுதொடர்பாக உலக வங்கி தரப்பில் சமீபத்தில் வெளியான அறிக்கை:
இந்தியாவில், 2011ல் தீவிர வறுமையின் அளவு 22.5 சதவீதமாக இருந்தது. இது, 2019-ல் 10.2 சதவீதமாக குறைந்துள்ளது. இதேபோல், 2011 – 19 காலகட்டத்தில், கிராமப்புறங்கள் மற்றும் நகரங்களில் வறுமை நிலை முறையே 14.7 மற்றும் 7.9 சதவீதம் குறைந்துள்ளது.
கிராமப்புறங்களில், 2011ல் வறுமை சதவீதம் 26.3 ஆக இருந்தது. இது 2019ல் 11.6 சதவீதமாக குறைந்துள்ளது.
இக்காலகட்டத்தில் நகர் பகுதிகளுடன் ஒப்பிடும் நிலையில், கிராமப்புறங்களில் வறுமை குறைப்பின் விகிதம் அதிகமாக இருக்கிறது.
ஆய்வின் அடிப்படையில், சிறிய அளவில் விவசாய நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள் அதிக வருமான வளர்ச்சி அடைந்துள்ளனர்.
இவர்களின் ஆண்டு வருமானம், 2013-19 காலகட்டத்தில் நாட்டின் ஆண்டு அடிப்படையிலான ஒட்டுமொத்த 2 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும் நிலையில், 10 சதவீதமாக அதிகரித்து உள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே சமீபத்தில் சர்வதேச நிதியம் வெளியிட்ட அறிக்கையிலும், இந்தியாவில் வறுமை கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.