பள்ளிக்கு வெளியே படிக்க வேண்டிய பாடம்!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

மனுசனைப் பாத்திட்டு உன்னையும் பாத்தா
மாற்ற மில்லேடா ராஜா – எம்
மனசுலே பட்டதை வெளியிலே சொல்றேன்
வந்தது வரட்டும் போடா-சில

(மனு)

உள்ளதைச் சொன்னா ஒதைதான் கெடைக்கும்
ஒலகம் இதுதாண்டா – ராஜா
உள்ளத் துணிவோட பொய் சொல்லுவோர்க்கு
உல்லாச புரிதாண்டா

(மனு)

வசதியிருக்கிறவன் தரமாட்டான்-அவனை
வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்

(வசதி)

வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
வாயாலே சொல்லுவான் செய்யமாட்டான்

(மனு)

பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்
பயணம் போறேண்டா – நான்
பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்
பயணம் போறேண்டா

(மனு)

அங்கே நானும் வாரேண்டா…
வெளியே படிக்க வேண்டியது நெறய இருக்கு
படிச்சிட்டு வாரேண்டா – சிலர்

(மனு)

எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
உழுது ஒளச்சு சோறும் போடுறான்..
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
நல்லா நாட்டைக் கூறுபோடறான் – இவன்
சோறு போடறான் – அவன்
கூறு போடறான்.   

(மனு)

– 1959-ம் ஆண்டு  ராமநாதன் நடிப்பில் வெளிவந்த ‘கண் திறந்தது’ திரைப்படத்தில் இடப்பெற்ற இப்பாடல் வரிகள் எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இசை : T.R.  ராஜகோபால்,   குரல் : K. ஜமுனாராணி இயக்கம் : K.V.  சீனிவாசன்

You might also like