தடைச் சட்டங்கள்
மிகுதியாக ஆக
மக்கள்
மேலும் மேலும் வறுமையடைகிறார்கள்.
கூர்மையான ஆயுதங்கள்
குவியக்குவிய
நாட்டில் குழப்பம் பெருகிறது.
தொழில் நுணுக்கம்
வளர வளர
வஞ்சகப் பொருட்கள்
மிகுதியாகின்றன.
சட்டங்கள் பெருகப் பெருகத்
திருடர்கள் பெருகுகிறார்கள்.
எனவே
ஞானி கூறுகிறான்;
“நான் தலையிடுவதில்லை.
மக்கள் தாமே
திருந்திக் கொள்கிறார்கள்”
- சீன அறிஞர் தாவோ. தமிழில்: கவிக்கோ அப்துல் ரகுமான்