விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்!

நினைவில் நிற்கும் வரிகள் :

***

தூங்காதே தம்பி தூங்காதே – நீயும்
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
சக்தியிருந்தால் உன்னைக் கண்டு சிரிக்கும்
சத்திரந்தான் உனக்கு இடங்கொடுக்கும்

(தூங்காதே)

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார் – சிலர்
அல்லும் பகலும் தெருக் கல்லாயிருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார்

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
உன்போல் குறட்டைவிட்டோரெல்லாம் கோட்டை விட்டார்
போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான் –
பள்ளியில் தூங்கியவன் கல்வியிழந்தான்

கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான் – கொண்ட
கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் –
இன்னும்
பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் –
பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா

(தூங்காதே)

  • 1958 – ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘நாடோடி மன்னன்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
  • இசை : S.M. சுப்பையா, N.S. பாலகிருஷ்ணன்.
  • குரல் : T.M. சௌந்தரராஜன்.
  • இயக்கம் : எம்.ஜி.ஆர்.
You might also like