நினைவில் நிற்கும் வரிகள்:
***
கடவுள் ஒரு நாள்
உலகைக் காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம்
நலமா என்றாராம்
ஒரு மனிதன்
வாழ்வில் இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே
கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்
(கடவுள்…)
கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம்
நான் தந்தது
காசும் பணமும் ஆசையும் இங்கே
யார் தந்தது
எல்லை இல்லா நீரும் நிலமும்
நான் தந்தது
எந்தன் சொந்தம் என்னும் எண்ணம்
ஏன் வந்தது
ஒரு மனிதன் வாழ்வில்
இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே
கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்
(கடவுள்…)
பள்ளி கூடம் செல்லும் வழியில்
கடவுள் நின்றாராம்
பச்சை பிள்ளை மழலை மொழியில்
தன்னை கண்டாராம்
உள்ளம் எங்கும் வெள்ளம் பொங்கும்
அன்பை கண்டானாம்
உண்மை கண்டேன் போதும் என்று
வானம் சென்றானாம்.
(கடவுள்…)
1969 – ம் ஆண்டு ஜெமினி கணேசன், நாகேஷ் நடிப்பில் வெளிவந்த ‘சாந்தி நிலையம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.
இசை – எம்.எஸ்.விஸ்வநாதன். குரல் – பி.சுசீலா