ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொன்று!

நினைவில் நிற்கும் வரிகள்: 

****

ஒருவன் மனது ஒன்பதடா அதில்
ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா அதில்
உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா

          (ஒருவன்..)

ஏறும்போது எரிகின்றான்
இறங்கும்போது சிரிக்கின்றான்
வாழும் நேரத்தில் வருகின்றான்
வறுமை வந்தால் பிரிகின்றான்

         (ஒருவன்..)

தாயின் பெருமை மறக்கின்றான்
தன்னலச் சேற்றில் விழுகின்றான்
பேய் போல் பணத்தைக் காக்கின்றான்
பெரியவர் தம்மைப் பகைக்கின்றான்

         (ஒருவன்..)

பட்டம் பதவி பெற்றவர் மட்டும்
பண்புடையோராய் ஆவாரா?
பள்ளிப் படிப்பு இல்லாத மனிதர்
பகுத்தறிவின்றிப் போவாரா?

         (ஒருவன்..)

1963-ல் எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்த  ‘தர்மம் தலை காக்கும்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். இசை: கே.வி.மகாதேவன் குரல்: டி.எம்.சௌந்தராஜன்

You might also like