டிஜிட்டல் திரையில் வாசிப்பு – நம் மூளையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது?
வாசிப்பு போன்று ஓர் இயல்பான விஷயம் எதுவும் இல்லை. வாசிப்பு பழக்கம் என்பது நமது சிந்தனையை மாற்றும் திறன் கொண்டது.
அனைவரும் புத்தகங்களை வாசிக்க வேண்டும். புத்தகங்கள் ஒரு வாழ்க்கை அனுபவம்; புத்தகங்கள் அறிவு சார்ந்தது. புத்தகங்கள் ஒரு சமூகம்.
புத்தகங்கள் இல்லையென்றால் மனிதர்களுக்கு தற்போது இருக்கும் பண்புகள் இருந்திருக்காது. மனித இனத்தின் மிகச் சிறந்த கண்டுப்பிடிப்புகளில் ஒன்று, படிப்பறிவு.
நம் பரிணாம வளர்ச்சி எனும் கடிகாரத்தில், கண் இமைக்கும் நொடியில் வாசிப்பு உருவானது. வாசிப்பு பழக்கம் தொடங்கி வெறும் ஆறாயிரம் ஆண்டுகளே ஆனது.
எத்தனை மது பாத்திரங்கள் அல்லது கால்நடைகள் நம்மிடம் உள்ளன என்பதை குறித்ததில் தொடங்கியது வாசிப்பு.
எழுத்துக்கள் தோன்றியதால் அறிவை சேமிக்கவும், நினைவில் வைத்து கொள்ளவும் ஒரு சிறந்த முறை உருவானது.
மனித மூளை வடிவமைப்பின் முக்கிய அமைப்பை மாற்றும் சக்தி கொண்டது வாசிப்பு.
இது பார்வைத் திறன், மொழித் திறன், சிந்தனைத் திறன், உணர்வுத் திறன் ஆகியவற்றுக்குள் ஒரு புதிய தொடர்பை ஏற்படுத்த உதவுகிறது.
ஒவ்வொரு புதிய வாசிப்பாளருக்கும் உண்மையில் புத்துணர்ச்சியை தருகிறது. அது நம் மூளையில் இயல்பாக உருவாக வில்லை.
படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டிய ஒவ்வொரு நபரும் தங்கள் மூளையில் ஒரு புதிய அமைப்பை உருவாக்க வேண்டும்.
ஒரு நல்ல கதையை வாசிப்பது என்பது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை விட அதிக நன்மைகள் அளிக்கக்கூடியது. வாசிப்புப் பழக்கத்திற்கு பல மருத்துவ ரீதியான நன்மைகள் உள்ளன.
வாழ்வில் ஏற்படும் நோய்களுக்கு தீர்வாக புனைவுகளை பரிந்துரைக்கும் கலையே நூலியல் மருத்துவம் பிப்லியோதெரபி. படைப்பாற்றல், அறிவாற்றல், கருணை ஆகிய மூன்று அற்புதமான திறன்களை வாசிப்பு அளிக்கிறது.
நீங்கள் படிக்கும் போது, உங்கள் மூளை தியான நிலைக்கு செல்கிறது. உங்கள் இதயத் துடிப்பு சீராகி, உங்களை அமைதிப்படுத்தி, பதட்டத்தைக் குறைக்கும் ஒரு செயல்முறையாக வாசிப்பு உள்ளது.
நாம் மேலோட்டமாக படிக்கும்போது, நாம் தகவலை மட்டும் பெறுகிறோம். நாம் ஆழமாகப் படிக்கும்போது, நமது பெருமூளைப் புறணியை (cerebral cortex) அதிகம் பயன்படுத்துகிறோம்.
ஆழ்ந்த வாசிப்பு என்பது நாம் தொடர்பு முறையை உருவாக்குவதாகும். நாம் அனுமானங்களை உருவாக்குகிறோம். இது நம்மை உண்மையிலேயே விமர்சனம், பகுப்பாய்வு, கருணை கொண்ட மனிதர்களாக உருவாக்குகிறது.
புத்தகம் வாசிப்பை ஒரு வேலை என்று நாம் நினைக்கிறோம், ஆனால் புத்தகம் வாசிப்பு ஒரு விநியோக செயல் திறன் கொண்டது (Delivery Mechanism).
வாசிப்பில் புதுமை
வாசிப்பு பழக்கம் புதுமை அடைந்து வருகிறது. அலைபேசியில் படிக்க வேண்டுமென்றே எழுதப்படும் அற்புதமான புத்தகங்கள் வந்துவிட்டன.
இந்த மாதிரியான புதிய முறைகள், புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு அதிக பலன்களை கொடுக்கின்றன.
அவர்கள் தடைகளைக் கடந்து செல்ல வேண்டியதில்லை. ‘நல்ல எழுத்து’ இதுதான் என்ற கட்டமைப்பை அது உடைக்கிறது.
மேலும் இது உண்மையில் மக்களைப் பேசவும் கதைகளைப் பகிர்ந்து கொள்ளவும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு அளிக்கிறது.
எதில் வாசிக்கிறோம் என்பது முக்கியமில்லை, எப்படி கிடைக்கிறது என்பது முக்கியமில்லை, கதைதான் முக்கியத்துவம் பெறுகிறது.
புத்தகம் என்பது ஒருவேளை இதுதான் என்ற மாயையை வழங்குகிறது; உண்மையில் அது அப்படி இருந்தும் இருக்காது, இது ஒரு சிந்தனை செயல்முறைக்கான ஒரு வழி.
“முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களும், விஞ்ஞானிகளும் ஒன்றிணைத்து, வாசிப்பில் டிஜிட்டல் மயமாக்கலின் தாக்கம் குறித்து ஆய்வு செய்தோம்.
இந்த ஆய்வில், உங்கள் ஸ்மார்ட்போனில் சமமாக நன்றாகப் படிக்கக்கூடிய நிறைய விஷயங்கள் உள்ளன; நீங்கள் சிறிய செய்தியையும் படிக்கலாம்.
ஆனால் அறிவாற்றல் அல்லது உணர்ச்சி ரீதியாக சவாலான ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். காகிதத்தில் படிப்பதை விட டிஜிட்டல் திரையில் படிப்பது மோசமான வாசிப்பு புரிதலுக்கு வழிவகுக்கிறது” என்று கூறுகிறார் இ-ரீட் என்ற அமைப்பின் தலைவர் அன்னா மன்கேன்.
உண்மையில், நாம் எதைப் படிக்கிறோம் அல்லது எவ்வளவு படிக்கிறோம் என்பது அல்ல, ஆனால் எப்படிப் படிக்கிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம்.
ஸ்கிம்மிங் செய்ய, அதாவது மேலோட்டமாக படிக்க, நமக்கு ஒரு நாட்டம் இருப்பதால், எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
வாசிப்பு மூளையில் ஒரு பிளாஸ்டிக் சுற்றமைப்பை (Circuit) உருவாக்குகிறது. இது அது படிக்கும் ஊடகத்தின் பண்புகளை பிரதிபலிக்கும். டிஜிட்டலின் குணாதிசயங்கள் சுற்றமைப்புகள் பிரதிபலிக்கும்.
வாசிப்பிற்கான திறன்களைப் பயிற்றுவிக்காவிட்டால், இறுதியில் மிகவும் சிக்கலான உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ளும் திறனையும், ஒருவேளை ஈடுபடும் மற்றும் கற்பனை செய்யும் திறனையும் நாம் இழக்க நேரிடும்.
மனிதனின் கற்பனை ஓர் அற்புதமான விஷயம் – நாம் எளிதில் ஒன்றை பழக்கக்கூடியவர்கள். நமக்குக் கிடைத்திருக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு நாம் விரும்பியதைச் செய்வதற்கான வழிகளைக் காண்கிறோம்.
“மக்கள் இருமொழி மற்றும் மும்மொழி பேசக்கூடியவர்களாக இருப்பதைப் போலவே, நாம் ஒரு இரு அறிவுத்திறன் கொண்ட மூளையை வளர்த்துக்கொள்வோம் என்று நான் நம்புகிறேன்.
வாசிப்பு நம் இனத்திற்குக் கொடுத்த அசாதாரணமான பரிசை இழக்காமல் இருக்க, நாம் படிக்கும் சாதனம் அல்லது வழியை, மிகவும் பொருத்தமாக் தேர்வு செய்ய நம்மை நாமே ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம்” என்கிறார் எழுத்தாளர் மரியானே ஊல்ஃப்.
நன்றி: முகநூல் பதிவு
11.03.2022 6 : 30 P.M